உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அஹில்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்தநாள் விழா

அஹில்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்தநாள் விழா

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் அஹில்யா பாய் ஹோல்கர் 300வது பிறந்தநாள் விழா, மாநிலத் தலைவர் செல்வ கணபதி தலைமையில் நடந்தது.அகமத் நகரிலுள்ள இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர் அஹில்யாபாய் ஹோல்கர். இந்துார் அரசியாக முடிசூட்டப்பட்ட இவர், தன்னுடைய அரசை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து காத்து, 30 ஆண்டுகள் முறையான நிர்வாகமும், நல்லதொரு ஆட்சியை நடத்தினார். இவர் இறந்த பிறகு துறவியாக கருதப்பட்டார்.மத்திய அரசு அஹில்யாபாய் ஹோல்கருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்துார் விமான நிலையத்திற்கு, தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம் என, பெயர் சூட்டியுள்ளது.இவரது 300வது பிறந்த நாள் விழா புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தினார். அமைச்சர் சாய் சரவணன்குமார், பொறுப்பாளர் சிவக்குமார், மாநில பொதுச் செயலாளர் மவுலிதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ