மேலும் செய்திகள்
கடலுார், பண்ருட்டியில் அண்ணாதுரை பிறந்த நாள்
16-Sep-2025
புதுச்சேரி: புதுச்சேரி அ.தி.மு.க, இணை செயலாளர் கணேசன் தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி, காமராஜர் நகர் தொகுதியில், 1,200 பெண்களுக்கு புடவைகள் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் ஜான்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., அவைத் தலைவர் அன்பானந்தம், இணை செயலாளர் திருநாவுக்கரசு, நகர செயலாளர் அன்பழகன், அண்ணா தொழிற்சங்க பாப்புசாமி, நாகமணி உட்பட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை, காமராஜர் நகர் தொகுதி செயலாளர் ஆறுமுகம் செய்திருந்தார்.
16-Sep-2025