மேலும் செய்திகள்
பட்டா கேட்டு பெண்கள் மனு
29-Jul-2025
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் வழங்கப்பட்ட இலவச பட்டா இடத்தை அளந்து கொடுக்க அ.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க., தொகுதி செயலாளர் கமல்தாஸ் மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவா, ராதா, நாராயணசாமி, இளையராஜா, சக்திவேல், வார்டு செயலாளர் செந்தில்குமார், கங்காதுரை, முத்துராஜா ஆகியோர் நில அளவை பதிவேடுகள் துறை இயக்குநர் சக்திவேலிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தட்டாஞ்சாவடி தொகுதியில் 2001ம் ஆண்டு 21 பேருக்கு இலவச மனைபட்டா வழங்கப்பட்டது. அதில், குடிசை மாற்று வாரியம் மூலம் 15 பேருக்கு, கல் வீடு கட்ட ரூ.40 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. ஆனால், 24 ஆண்டாகியும் இதுவரையில், மனைபட்டாவிற்கான இடத்தை அரசு அவர்களுக்கு பிரித்து வழங்கவில்லை. எனவே, அரசு வழங்கிய இலவச மனைப் பட்டா இடத்தை அளவீடு செய்து பயனாளிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
29-Jul-2025