உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு கல்லுாரியில்   எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

 அரசு கல்லுாரியில்   எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

திருபுவனை: புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த கலித்தீர்த்தாள் குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, ரெட் ரிப்பன் கிளப் மற்றும் கல்லுாரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவு இணைந்து நடத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்து. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார். என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர் லெப்டினன்ட், கதிர்வேல் வரவேற்றார். திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஐஸ்வர்யா, எச்.ஐ.வி., பரவும் விதம் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விளக்கி பேசி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். சுகாதார ஆலோசகர் வெற்றிவேல் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான ஆதரவு மற்றும் அரவணைப்பு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் தமிழ் துறை தலைவர் சரவணன், கணக்கு துறை தலைவர் ராஜ்மோகன், சுற்றுலாத்துறை தலைவர் சாபுகே தங்கப்பன் கணினி அறிவியல் துறை தலைவர் வைத்திலிங்கம், வணிகவியல் தலைவர் செந்தமிழ்ராஜா, உடற்கல்வி இயக்குனர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ் துறை உதவி பேராசிரியர் சவுந்தரவள்ளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை