உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விமானப்படை வேலைவாய்ப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி

விமானப்படை வேலைவாய்ப்பு: விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி, : புதுச்சேரியில் நடந்த விமானப்படை வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி, பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லுாரியில், இந்திய விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் வீர மோகன் மற்றும் சிவப்பிரியா, தாம்பரம் விமானப்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மாணவிகளுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினர். மேலும், விமானப்படை பிரிவு விங் கமாண்டர் ராகுல்குமார் மற்றும் அதிகாரிகள் அருண்குமார், அமித் உள்ளிட்டோர் உரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை குறித்து வினாடி - வினா போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி