உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சீனியர் சிட்டிசன்கள் அட்ராசிட்டி திறந்தவெளி பாரான ஏர்போர்ட் சாலை

சீனியர் சிட்டிசன்கள் அட்ராசிட்டி திறந்தவெளி பாரான ஏர்போர்ட் சாலை

புதுச்சேரி, : லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை திறந்தவெளி பாராக மாறி வருவது பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.புதுச்சேரி விமான நிலையத்தினையொட்டி 500 மீட்டருக்கு இருபக்கமும் மரங்கள் அடர்ந்த ஏர்போர்ட் சாலை உள்ளது. இந்த சாலையில் காலை, மாலையில் பொதுமக்கள் நடைபயிற்சியும், சிறுவர்கள் 'ஸ்கேட்டிங்' பயிற்சி மேற்கொள்கின்றனர்.எப்போதும் பரபரப்பாக இருக்கும் இச்சாலையை, ஞாயிற்றுக் கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பகலிலேயே கும்பல், கும்பலாக பைக்கில் வரும் 'சீனியர் சிட்டிசன்கள்' திறந்த வெளிபாராக மாற்றி வருகின்றனர். மது குடித்துவிட்டு, பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர்.இந்த பாட்டில்கள் உடைந்து சிதறிக் கிடக்கின்றன.இது அதிகாலையில், நடைபயிற்சி ஈடுபடுபவர்களின் பாதங்களை பதம் பார்க்கிறது. மேலும் அவர்கள் சாப்பிட்ட சிக்கன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனை சாப்பிட கூட்டம், கூட்டமாக சுற்றித் திரியும் நாய்கள், வாக்கிங் செல்வோரை துரத்தி கடிக்கின்றன.என்.சி.சி., கேன்டீன் முதல் விமான நிலைய பிரதான நுழைவாயிலுக்கு முந்தைய கேட் வரை பிளாஸ்டிக் கப், கேரிபேக், ஐஸ்கிரீம் கப், கேக் அட்டை பெட்டி, டீ கப், ஹான்ஸ், சிகரெட் உள்ளிட்ட போதை பாக்கெட்டுகள் சாலையின் இருபுறமும் சிதறி கிடப்பது, அவ்வழியே செல்லும் மக்களை முகம் சுளிக்க வைக்கின்றது.பொதுவெளியில் மது அருந்துவது சட்டப்படி தவறு. அதுவும் சாலையில் அருந்தி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தினால், புதுச்சேரி போலீஸ் சட்டம் -1966 பிரிவு 34-இ கீழ், ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.50 அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உள்ளது.எனவே, 'சீனியர் சிட்டிசன்கள்' சமூக பொறுப்பை உணர்ந்து, திறந்த வெளியில் மது அருந்துவதையும், தவிர்க்க வேண்டும்.வரும், 20ம் தேதி விமான சேவை மீண்டும் துவங்க உள்ளது. இந்த சாலை வழியாக பல்வேறு சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்குள் வர உள்ளனர்.அவர்களை, திறந்தவெளி பாருடன் வரவேற்பது மாநிலத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தும். எனவே, ஏர்போர்ட் சாலையில் லாஸ்பேட்டை போலீசார் ரோந்து சென்று திறந்த வெளி பாராக மாறி வருவதை தடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

S Vaithiya Nathan
நவ 28, 2024 05:14

அரியாங்குப்பம் சிக்னலில் இருந்து ராஜீவ் காந்தி சிக்னல் வரை டிராபிக் வாகன நெரிசல் நாளுக்கு நாள் மிகவும் அதிகமாகிக் கொண்டே போகிறது.தயவுசெய்து இதைப் பற்றியும் தாங்கள் செய்து குறிப்பு எழுதவும்.


S Vaithiya Nathan
நவ 28, 2024 05:13

இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுபோல பாண்டிச்சேரி பீச்சிலும் நிறைய குடிமகன்கள் அலங்கோணமான நிலையில் வெஞ்சுகளில் படுத்தும் அரைகுறையான நிர்வாண நிலையில் உள்ளனர். மேலும் தினமலர் பாண்டிச்சேரியின் டிராபிக் பிரச்சினைகளைப் பற்றியும் ஒரு தனி செய்தி இடலாமே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை