அல்கெமி வாழ்வியல் பயிற்சி வகுப்பு
புதுச்சேரி: வாழ்வில் வெற்றி பெறும் கலையை, குரு மித்ரேஷிவா கற்றுத்தரும் அறிமுக வகுப்பில், மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.வாழ்வில் வெற்றி பெறும் கலையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க குரு மித்ரேஷிவா, உலகெங்கும் அல்கெமி வகுப்புகளை நடத்தி வருகிறார். இந்த அறிமுக வகுப்பு, புதுச்சேரி, லால் பகதுார் சாஸ்திரி சாலையில் உள்ள கம்பன் கலையரங்கில், நேற்று மாலை நடந்தது.இந்த வகுப்பை, குரு மித்ரேஷிவா நடத்தினார். தொடர்ந்து, மக்களின் வாழ்க்கையில், நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றா, நினைத்த அனைத்தையும் நிஜமாக்க, நம்பிக்கை ஊற்றி அதற்கான வெற்றியை எடுத்து கூறினார். நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.