அகில இந்திய யோகாசன போட்டி: புதுச்சேரி அணி 19ம் தேதி தேர்வு
புதுச்சேரி; அகில இந்திய யோகாசன போட்டியில் பங்கேற்க உள்ள புதுச்சேரி அணி தேர்வு முகாம் வரும் 19ம் தேதி நடக்க உள்ளது.அகில இந்திய அளவிலான சிவில் சர்வீஸ் யோகாசன போட்டிகள் மார்ச் 5ம் தேதி முதல் 8 ம் தேதி வரை சண்டிகரில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க புதுச்சேரி சிவில் சர்வீஸ் ஆண்கள்-பெண்கள் அணி வீரர்கள் தேர்வு ராஜிவ் உள்விளையாட்டு அரங்கில் வரும் 19ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது.தேர்வு முகாமில் ஆண்கள், பெண்கள் என தலா 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இவர்களுடன் இரண்டு அணி மேலாளர்கள், இரண்டு பயிற்சியாளர்கள் 40 பேர் அடங்கிய புதுச்சேரி சிவில் சர்வீஸ் அணி சண்டிகருக்கு அனுப்பப்பட உள்ளனர்.தேர்வு முகாமில் தன்னாட்சி, சார்பு நிறுவனங்கள் இல்லாமல் நிரந்தர பணியில் உள்ள அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம். பணியில் சேர்ந்து 6 மாதத்திற்குள்ளாக உள்ள அரசு ஊழியர்கள் இம்முகாமில் பங்கேற்க முடியாது என, அறிவிக்கப்பட் டுள்ளது.