உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உப்பளத்தில் வளர்ச்சி பணிகள் தொடர வாய்ப்பளியுங்கள்: அனிபால் கென்னடி

உப்பளத்தில் வளர்ச்சி பணிகள் தொடர வாய்ப்பளியுங்கள்: அனிபால் கென்னடி

புதுச்சேரி: உப்பளம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் அனிபால் கென்னடி நேற்று தொகுதிக்குட்பட்ட ராமராஜா, முல்லா மற்றும் காஜீயார் வீதிகளில் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர், தொகுதியில் பாழடைந்த கிடந்த குபேர் திருமண மண்டபத்தை தனது முயற்சியால் சீரமைத்து திறந்து வைத்தேன். நேதாஜி நகரில் சாலையோர மீன் வியாபாரிகளுக்காக மீனவர் அங்காடி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு திறக்கப்பட உள்ளது. வீடற்ற 84 பேருக்கு துப்ராயப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். கோலாஸ் நகர் பூங்கா புதுப்பித்து திறக்கப்பட உள்ளது. பெரியபள்ளி மற்றும் வீரர்வெளி சாலை ரூ.15.38 கோடி மதிப்பில் புதிய சாலை, வடிகால் வசதி மற்றும் புஸ்சி வீதியில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. தொகுதியில் நடந்து வரும் கட்டமைப்பு பணிகளை தொடர, வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு அளித்து என்னை வெற்றிப் பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பிரசாரத்தின்போது வி.சி., மாவட்ட செயலாளர் அனுஷியா, திருகுமரன், மாவட்ட பொருளாளர் பத்மநாபன், காங்., மாநில பொதுச்செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை