முன்னாள் மாணவர்கள் சங்க செயற்குழு கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி கராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு தொடர்பான செயற்குழு கூட்டம் நடந்தது. ஜீவானந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கலியமுருகன், பொருளாளர் சதாசிவம், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சேகரன் வழக்கறிஞர் ஜெகஜோதி, எஸ்.பி., ஓய்வு வீரவல்லவன், சிவில் பொறியாளர் லட்சுமணன், ரோட்டேரியன் பாஸ்கர், புகைப்படக் கலைஞர் ரங்கநாதன், சிங்காரவேலு, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஜீவானந்தம் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மூன்றாம் ஆண்டு விழா வரும் டிசம்பர் 27ம் தேதி நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், தங்களுக்குத் தெரிந்த பள்ளியின் முன்னாள் மாணவர்களையும் நண்பர்களையும் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து பங்கேற்க செய்யுமாறு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.