ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
புதுச்சேரி: ஜீவானந்தம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் கலைநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகஜோதி, பொருளாளர் சதா சிவம், துணை தலைவர்கள் சேகரன், சந்திரசேகரன், கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். ஜீவானந்தம் அரசு பள்ளியின் 1990 - 92ம் ஆண்டின் முன்னாள் மாணவர்கள் குடு ம்பத்துடன் பங்கேற்றனர். விழாவில் முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடி, பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 16 ஆசிரியர்கள், பள்ளியில் படித்த 5 அரசு அதிகாரிகளை கவுரவித்து, நினைவு பரிசு வழங்கினர். தொடர்ந்து, பள்ளியின் வளர்ச்சி மற்றும் கல்வி முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. சங்கத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் நடந்தது.