மேலும் செய்திகள்
மாணவர்கள் சங்கமம்
28-Dec-2024
புதுச்சேரி: திருச்சி என்.ஐ.டி., கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி புதுச்சேரியில் நடந்தது.திருச்சி என்.ஐ.டி., பொறியியல் கல்லுாரியில் 1975 - 1980ம் ஆண்டுகளில் படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, 44 ஆண்டுகளுக்குப் பின் புதுச்சேரி, கிருமாம்பாக்கம் தனியார் ஓட்டலில் நடந்தது.இதில் 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் பேராசிரியர், டைரக்டர், கன்சல்டன்ட் போன்ற பல்வேறு பதவிகளில் இருந்து வருகின்றனர். சந்திப்பின் போது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிரில், ரவிச்சந்திரன், உன்னிகிருஷ்ணன், ஸ்ரீதர், டாக்டர் நம்பிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
28-Dec-2024