உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லட்சுமி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிப்பு

லட்சுமி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிப்பு

புதுச்சேரி: தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் நேற்று அம்பாள் லட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தார். புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 7ம் ஆண்டு சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 11ம் தேதி துவங்கி, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. மூன்றாம் நாளான நேற்று சண்டி மகாதேவி லட்சுமி அலங்காரத்தில் தங்க தாமரையில் அமர்ந்து காட்சியளித்தார். காலை, மாலை பூஜை, ேஹாமம், தீபாராதனை, அன்னதாம் நடந்தது. புதுச்சேரி பாராதியார் பல்கலை கூட மாணவிகளில் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தர்ம சம்ரக் ஷண சமிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ