மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
27-Jan-2025
வில்லியனுார்: வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் ஆனந்த சிறுவர் திட்டம் துவக்க விழா நடந்தது.புதுச்சேரி வாழும் கலை மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், நடந்த விழாவிற்கு தலைமையாசிரியர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஆசிரியை சங்கர்தேவி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக வாழும் கலை பயிற்சியாளர்கள் பிரதீப்குமார், உண்ணாமலை ஆகியோர் பங்கேற்று அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளுவதற்கு யோகா மற்றும் விளையாட்டு மூலம் மாணவியர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவிகள் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கனகா, பிரபாகரன், பிரேமா, கருணாகரன், விஜயலட்சுமி, உமாதேவி மற்றும் கணினி பயிற்றுனர் ரம்யா ஆகியோர் செய்தனர். ஆசிரியை மகாராணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.
27-Jan-2025