உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்கன்வாடி மையம் திறப்பு விழா

அங்கன்வாடி மையம் திறப்பு விழா

புதுச்சேரி; லாஸ்பேட்டை தொகுதி குறிஞ்சி நகரில், புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, வைத்திலிங்கம் எம்.பி., திறந்து வைத்தார்.லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில், அங்கன்வாடி மையம் சேதமடைந்தது. அதனை அடுத்து எம்.பி., மேம்பாட்டு நிதியின் கீழ் 24.17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்தை, வைத்திலிங்கம் எம்.பி., திறந்து வைத்தார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ்,செயற்பொறியாளர் மலைவாசன், உதவிப் பொறியாளர் கலியவரதன், இளநிலை பொறியாளர் சாந்தன், அங்கன்வாடி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !