உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்கன்வாடி மையம் திறப்பு

அங்கன்வாடி மையம் திறப்பு

திருபுவனை: திருபுவனை அடுத்த சிலுக்காரிபாளையம் கிராமத்தில் புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில், ரூ.35 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சீனுவாசராம், குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி பணியாளர் பிரியதர்ஷினி, உதவியாளர் வெண்ணிலா வரவேற்றனர்.பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர்கள் கிருபாகரன், தேவேந்திரன், ஒப்பந்ததாரர் இளங்கோ சிலுக்காரிபாளையம் அரசு தொடக்கப் பள்ளி பொறுப்பாசிரியர் மீரா, ஆசிரியர் பாரதிராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி