உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்க பணியாளர்கள் 7வது ஊதியக்குழு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகம் முன்பு நேற்று மாலை அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சங்க தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். செயலாளர் லலிதா, செயல் தலைவர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை