உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போனஸ் வழங்காததை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா

போனஸ் வழங்காததை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா

புதுச்சேரி: தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசின் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம், தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில், சுதேசி காட்டன் மில் அருகே தர்ணா போராட்டம் நடந்தது.சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் முனுசாமி, அமைப்பு செயலாளர்கள் சிவஞானம், இளங்கோவன், ஜவகர், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் பிரேமதாசன், ஆலோசகர்கள் சீதாராமன், கீதா, வின்சென்ட்ராஜ், கிறிஸ்டோபர், ஆனந்தகணபதி, ஞானசேகர், கண்டன உரையாற்றினார்.தீபாவளிக்கு ஊதியம், போனஸ் வழங்காத மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு துறையைகண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.நிர்வாகிகள் வேலய்யன், பச்சையப்பன், ராஜலட்சுமி, செங்கதிர், மகேஷ், லிதா, மணிவாணன், உதயகுமார், பஸ்கரன், அய்யனார், நாதன், செய்தி தொடர்பாளர் நமச்சிவாயம் கலந்து கொண்டனர். பொருளாளர் வானவரம்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ