உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கட்டுமான உதவியாளர் பணிக்கு 3 ஆண்டு வயது தளர்வு அனிபால் கென்னடி வலியுறுத்தல்

கட்டுமான உதவியாளர் பணிக்கு 3 ஆண்டு வயது தளர்வு அனிபால் கென்னடி வலியுறுத்தல்

புதுச்சேரி, : கட்டுமான உதவியாளர் பணியிடங்களுக்கு 3 ஆண்டு வயது தளர்வு வேண்டும் என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.பூஜ்ய நேரத்தில் அவர் பேசியதாவது;மின்துறையின் கட்டுமான உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், அதிகபட்ச வயது வரம்பு 32 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.சி., எம்.பி.சி., பட்டியல் இன மக்கள் உள்ளிட்ட பல்வேறு வகுப்பினருக்கு முறையே தளர்வு மூன்று வயது சேர்த்து முறையே 35 மற்றும் 37 வயது வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த பணியிடம் 11 ஆண்டுகளாக எடுக்கப்படவில்லை. கடைசியாக தங்களது ஆட்சி காலத்தில் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 270 கட்டுமான உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டனர். அதன் பின் மின்துறையில் இப்படி ஒரு பணியிடம் நிரப்பப்படவில்லை. 11 ஆண்டுகளாக ஐ.டி.ஐ., படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகையால், 3 ஆண்டுகள் வயது தளர்வினை அனைத்து பிரிவினருக்கும் அளிக்க வேண்டும். இது புதுச்சேரி அரசின் குரூப்-சி பணியிடம் என்பதால் மாநில அரசே முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது. கவர்னருடன் கலந்து ஆலோசித்து முடிவினை முதல்வர் அறிவிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ