பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு 15ல் நேரடி கலந்தாய்வு அறிவிப்பு
புதுச்சேரி: பி.டெக், லேட்ரல் என்ட்ரி படிப்பிற்கு 15ம் தேதி நேரடி கலந்தாய்வு நடக்கிறது. சென்டாக் பி.டெக்., லேட்ரல் என்ட்ரி படிப்புகளுக்கான ஸ்டே கவுன்சிலிங் எனும் நேரடி கலந்தாய்வு வரும் 15ம் தேதி புதுச்சேரி இ.சி.ஆர்., காமராஜர் மணி மண்டபத்தில் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு நடக்கும் முதல் அமர்வு கலந்தாய்வில் சென்டாக்கில் விண்ணப்பித்து பதிவு செய்த புதுச்சேரி மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 11:30 மணிக்கு நடக்கும் இரண்டாம் அமர்வு கலந்தாய்வில் புதுச்சேரியை சேர்ந்த சென்டாக்கில் இதுவரை பதிவு செய்யாத மாணவர்களும், மதியம் 2:00 மணிக்கு சென்டாக்கில் பதிவு செய்த பிற மாணவர்களுக்கும், 2:30 மணிக்கு சென்டாக்கில் பதிவு செய்யாத மாணவர்களுக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். காரைக்கால், மாகி, ஏனாம் மாணவர்கள் https://meet.google.com/fuf-nxpp-fft என்ற இணைய இணைப்பு வாயிலாக பங்கேற்கலாம். இதேபோல், கலந்தாய்வில் பிற மாநில மாணவர்களும் பங்கேற்கலாம். புதுச்சேரி மாணவர்கள் சேர்க்கை பிறகு காலியிடங்கள் இருந்தால், அந்த இடங்கள் பிற மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என, சென்டாக் அறிவித்துள்ளது. உதவிக்கு 0413 - 2655570 / 2655571 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.