உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2026 மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி; திருநள்ளாறு கோவிலில் அறிவிப்பு

2026 மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி; திருநள்ளாறு கோவிலில் அறிவிப்பு

காரைக்கால் : காரைக்கால் சனீஸ்வர பகவான் கோவிலில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என, பஞ்சாங்கம் வாசித்து, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.காரைக்கால், திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அணுக்கரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வது வழக்கம்.சனிப்பெயர்ச்சி விழா 2025 மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்த நிலையில், இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை. இந்நிலையில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்து, அறிவித்தனர். சிவாச்சாரியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Muralidharan S
ஏப் 15, 2025 12:23

ஜோசியர்கள் சனி பெயர்ச்சியை அவரவர் இஷ்டத்திற்கு ரம்ஜான் பக்ரீத் போல மாற்றிவிட்டனர். ஜோசியர்களுக்கு மக்களை குழப்பி, பணம் பார்ப்பது ஒரு பிழைப்பாகிவிட்டது.... கிரஹங்கள் அது பாட்டுக்கு அது அது பெயர்ச்சி ஆகிக்கொண்டுதான் இருக்கும்.. நாம் பிறருக்கு தீங்கு எதுவும் செயல், தீய வழியில் பொருள் ஈட்டாமல், தீய வழியில் பணத்தை இறைக்காமல் இருந்து, நம்முடைய குல தெய்வங்களை தினம்தோறும் நம்பி வணங்கிவந்தால் போதும். மக்கள் அவரவர் பிழைப்பை ஒழுங்காக இப்படி பார்த்துக்கொண்டு இருந்தால் போதும்.. எந்த ஜோசியர் பின்னாலயும் திரிய வேண்டிய அவசியம் இல்லை.. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று மக்கள் அழைத்துக்கொண்டு இருக்கும் வரை , ஜோசியர்கள் காட்டில் மழைதான்..


சமீபத்திய செய்தி