உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

புதுச்சேரி; புதுச்சேரி மாநில மாணவர் காங்., சார்பில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.மாநில மாணவர் காங்., தலைவர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர். காமராஜர் சாலையில் தொடங்கிய ஊர்வலம் நேரு வீதியில் நிறைவு பெற்றது.தொடர்ந்து காங்., தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் கட்சியில் இணைந்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி