உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான்

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான்

புதுச்சேரி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுச்சேரி மாவட்டம் சார்பில், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் நடந்தது. கடற்கரைச் சாலை காந்தி சிலை எதிரே துவங்கிய மினி மாரத்தான் போட்டியில் திரளான இளைஞர்கள், மாணவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றனர். சமுதாயத்தில் சீரழிவை ஏற்படுத்தும் புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு போன்ற சமூகத் தீமைகளுக்கு எதிராக நடந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை