உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

 புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

பாகூர்: ஆதிங்கப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில், புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியை நான்சி ஏஞ்சலின் தலைமை தாங்கினார். பின்னாச்சிக்குப்பம் துணை சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சூரியபிரபு தலைமையிலான மருத்துவ குழுவினர் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினர். புகையிலை பயன்படுத்துவதில்லை என்ற வாக்குறுதி மாணவர்களிடம் பெறப்பட்டது. மேலும், புகையிலை பயன்படுத்துபவரை கண்டால், அவர்களை விட்டு விலகுவது நம் உடல் நலத்திற்கு நல்லது என்பது விவரிக்கப்பட்டது. புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு பற்றிய பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில், விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி மாணவர்களும், ஆசிரியர்களும், முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரகுநாதன், செல்வி வர்ஜினா, யோகானந்தன், ராஜலட்சுமி, லோகேஸ்வரி, பூங்கொடி, ரஹானா, பிரதீபா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி