மேலும் செய்திகள்
பள்ளிச் செய்தி
24-Oct-2026
பாகூர்: பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், குருவிநத்தம் கிராமத்தில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. குருவிநத்தம், பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முத்துக்கிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி நடந்த புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். பாகூர் அரசு மருத்துவமனை பல் டாக்டர் தேவி, ஆசிரியை திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை உதவியாளர் உமா செய்திருந்தார்.
24-Oct-2026