உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அப்போலோ சிறப்பு நிபுணர் 15ம் தேதி புதுச்சேரி வருகை

அப்போலோ சிறப்பு நிபுணர் 15ம் தேதி புதுச்சேரி வருகை

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் சிறப்பு நிபுணர் வரும் 15ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார். சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் சாருமதி, வரும் 15ம் தேதி சனிக்கிழமை, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 10:00 முதல் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். அதில், அடி வயிற்றில் வலி, ரத்த கசிவு, சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள், கர்பப்பை, சினைப்பையில் கட்டிகள், குழந்தையின்மை, ஆபத்து நிறைந்த கர்ப்பம், மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், லேப்ரோஸ்கோபி சிகிச்சைக்கும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம். டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற 0413- 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி