உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு

நர்சிங் படிப்பிற்கு விண்ணப்பம் வரவேற்பு

புதுச்சேரி: ஜிப்மரில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற் கான விண்ணப்பங்கள் ஆன் லைனில் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஜிப்மர் நிர் வாகம் விடுத்துள்ள அறி விப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி, ஜிப்மரில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் 94 இடங்களும், அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்பில் 87 என, மொத்தம் 181 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு சேர்க்கைக்கு, ஜிப்மர் இணையத்தில் வரும் 22ம் தேதி மாலை 4:00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதிப் பட்டியல் அக்டோபர் 8ம் தேதிக்கு முன் வெளியிடப்படும். வகுப்புகள் அக்டோபர் 27ம் தேதி முதல் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !