உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அஞ்சலக சேவை கிளைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அஞ்சலக சேவை கிளைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுச்சேரி: அஞ்சலக சேவை கிளைகள் துவங்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புதுச்சேரி அஞ்சலகங்களின் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் இனக்கொல்லு காவ்யா செய்திக்குறிப்பு; அஞ்சல் சேவைகளை விரிவுபடுத்துவதற்கும் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதற்கும் புதுப்பிக்கப்பட்ட'பிரான்சைஸி அவுட்லெட்' எனும் அஞ்சலக சேவை கிளைகள் துவக்கி வைக்கப் படுகிறது. உரிமம் பெற்று துவங்கும் திட்டத்தின் கீழ் பிரான்சைஸி அவுட்லெட் திறக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான நபர்கள், அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பிரான்சைஸி அவுட்லெட்களில் தபால் தலை விற்பனை, துரித அஞ்சல் முன் பதிவு, பதிவு அஞ்சல் முன்பதிவு, மணியார்டர் மற்றும் பல்வேறு சில்லரை சேவைகள் உள்ளிட்ட பல அஞ்சல் தயாரிப்பு சேவைகளை வழங்கும்.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன், தேவையான ஆவணங்களுடன் நியமிக்கப்பட்ட அஞ்சல் அதிகாரிக்கு சமர்ப்பிக்கலாம். விரிவான வழிகாட்டுதல்கள், தகுதி அளவுகோல்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள அஞ்சல் கோட்டங்களில் கிடைக்கின்றன. மேலும், https://utilities.cept.gov.in/DOP/ViewUploads.aspx?uid=10 என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை வரும் 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு 0413-2225373, 2337017 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை