வீரதீர செயலுக்கான விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
புதுச்சேரி: காவல் துறையினர் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கான மத்திய அரசின் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி காவல்துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை, காவல் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றரிக்கையில் கூறியிருப்பதாவது;வீரதீர செயலுக்காக இந்திய அளவில் வழக்கப்படும் மத்திய அரசின் அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா, சவுர்யசக்ரா ஆகிய 3 உயரிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.இந்த விருதுகள் இந்திய அரசால் குடியரசு தினம் மற்றும் சுதந்திரதினத்தின்போது அறிவிக்கப்படுகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை முதல் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம்வரை போலீஸ் அதிகாரிகள் செய்த வீரதீர செயல்களை பட்டியலிட்டு இந்த விருதுக்கு அனுப்ப வேண்டும். பரிந்துரைகளை வரும் 24ம் தேதிக்குள் டில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு (பொதுப்பிரிவு) அனுப்பி வைக்க வேண்டும். மக்களுகானஜீவன் ரக் ஷா விருது:
இதேபோல் ஒருவரின் உயிரை காப்பாற்றிய செயலுக்கு வழங்கப்படும் ஜீவன் ரக் ஷா விருதுக்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூன் 30ம் தேதி மாலை 5;00 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.