பல்கலை., முதுநிலை, டிப்ளமோ படிப்புகளுக்கு பிப்., 1 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதுநிலை, பட்டயப் படிப்புகளுக்கு பிப்ரவரி 1ம் தேதி வரை தேசிய தேர்வு முகமை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய தேர்வு முகமை கடந்த 2022ம் ஆண்டு முதல் புதுச்சேரி பல்கலைக்கழக படிப்புகளுக்கு கியூட் தேர்வு அடிப்படையில் சேர்க்கையை நடத்தி வருகிறது. இந்தாண்டும் பொது நுழைவுத் தேர்வு கியூட் (பி.ஜி) - 2025- அடிப்படையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்பட உள்ளது.இதற்கான இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான தேசிய தேர்வு முகமை இணையதளம் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2025--26 ம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டம், பட்டயப் படிப்புகளில் சேர விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள் கியூட் (பி.ஜி) நுழைவு தேர்வுக்கு https://exams.nta.ac.in/CUET--PG/ என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் https://www.pondiuni.edu.in/admissions-2025----26/ என்னும் பல்கலைக்கழக வலைத்தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். அப்டேட் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் https://exams.nta.ac.in/CUET--PG/ என்னும் என்.டி.ஏவின் வலைத்தளத்தைத் தவறாமல் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஆன்லைன் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த பிப்., 2ம் தேதி இறுதி நாளாகும். விண்ணப்பங்களில் திருத்தங்களை பிப்வரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தேர்வு மைய விபரங்கள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான அட்மிட் கார்டுகளை தேர்வு துவங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன் பெற்றுக்கொள்ளலாம். நுழைவு தேர்வுகள் மார்ச் 13ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பம் தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால், 91-11-40759000 என்ற ெஹல்ப் டெஸ்க் எண்கள் அல்லது helpdesk-nta.ac.inஎன்ற இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.