உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ஜ., செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்

பா.ஜ., செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்

புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். புதுச்சேரியில் பா.ஜ., நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகளை பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் வழிகாட்டுதலின் பேரில், நகர மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ் நியமித்தார். தொகுதி தலைவராக முருகன், துணைத் தலைவர்களாக ஆனந்தன், மாலதி, முத்துகுமரவேலு, பொதுச் செயலாளர்களாக செல்வம், பாக்கியலட்சுமி, செயலாளராக ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, வீரமணி, பொருளாளராக விநாயகம், சமூக ஊடக துறை அமைப்பாளர் சதீஷ்குமார், தொழில்நுட்ப துறை அமைப்பளராக முருகன், மனதின் குரல் ஒருங்கிணைப்பளராக உமாசங்கரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். நகர மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக பாலசுப்ரமணி, கீதா, தரணி, சுந்தரி, குப்புசாமி, பாலமுருகன், ஹரிகிருஷ்ணன், பழனிவேலு உள்ளிட்ட 30 பேர் நியமிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ