உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழு தலைவர் நியமனம்

பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குழு தலைவர் நியமனம்

புதுச்சேரி : பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான காவல் துறை குழுவின் தலைவராக சீனியர் எஸ்.பி., அனிதா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்காக, மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.மேலும், பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க ஒவ்வொரு துறைகளிலும் உள்ளூர் குழு அமைக்கப்பட்டு வருகிறது.பெண்கள் பணிபுரிய வசதியாகவும், உகந்ததாகவும் இருக்கும் பணிச்சூழலை உறுதி செய்வதையும், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்வதையும் இந்த குழுவின் முதன்மையான நோக்கமாக உள்ளது.அதன்படி புதுச்சேரி காவல் துறையில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பதற்கான குழுவின் தலைவராக சீனியர் எஸ்.பி., அனிதா ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.இக்குழுவில் எஸ்.பி., ரச்சனாசிங் செயலாளராகவும், மகளிர் சப் இன்ஸ்பெக்டர் அகல்யா, வித்யா ராம்குமார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி