உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்பெக்ட்ரா அகாடமியில் பாராட்டு விழா

மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஸ்பெக்ட்ரா அகாடமியில் பாராட்டு விழா

புதுச்சேரி: ஸ்பெக்ட்ரா அகாடமியில் பயின்று மருத்துவ படிப்பில் சேர்ந்த 245 மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.ஸ்பெக்ட்ரா அகாடமி சார்பில் மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் ஸ்பெக்ட்ரா அகாடமி மாணவர் லட்சுமிநரசிம்மன் 700 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி அளவில் சிறப்பிடம் பெற்றார். இந்தாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஸ்பெக்ட்ரா அகாடமி மாணவர்கள் 245 பேர் சிறந்த மருத்துவ கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர். 10 பேர் ஜிப்மர் மருத்துவ கல்லுாரியிலும், 235 பேர் இதர அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் சேர்ந்துள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா, சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. பேச்சாளர் கலியமூர்த்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். டாக்டர் மதனகோபால் மாணவர்களை வாழ்த்தினார்.ஸ்பெக்ட்ரா அகாடமி தலைவர் செந்தில்குமார், மேலாண் இயக்குநர் கார்த்திகேயன் மாணவர்களை வாழ்த்தி பேசுகையில், ''வரும் கல்வியாண்டிற்கான நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு குறுகிய கால பயிற்சி வகுப்புகள் வரும் மார்ச் 27ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி வளாகங்களுடன் விடுதி வசதி உள்ளது. இதற்கான சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. விபரங்களுக்கு 70945 77772, 0413 4506060, 2200393 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்'' என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி