மேலும் செய்திகள்
இருசக்கர வாகனங்களுக்கு ஏர்போர்ட்டிற்குள் தடை
25-Sep-2024
இருசக்கர வாகனங்களுக்கு ஏர்போர்ட்டிற்குள் தடை
25-Sep-2024
உளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உளுந்துார்பேட்டை அடுத்த பெரும்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் மூர்த்தி, 24. இவர் உளுந்துார்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று பைக் வாங்கியிருந்தார். 17,000 ரூபாய் தவணை நிலுவையில் இருந்தது. இதனால் மூர்த்தியின் பைக்கை நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். இந்நிலையில் நேற்று மூர்த்தி தவணை தொகையை செலுத்துவதற்காக சென்றபோது நிதி நிறுவன ஊழியர்கள் பைக்கை விற்று விட்டதாக கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து மூர்த்தி உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நிதி நிறுவன ஊழியர்களிடம் நேற்று இரவு 7:00 மணியளவில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் பலர் திரண்டு போலீஸ் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் நிதி நிறுவன அலுவலகத்தை பூட்டிவிட்டு இன்று விசாரணைக்கு வருமாறு கூறி அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
25-Sep-2024
25-Sep-2024