உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரியப்பாளையம் பாலம் இன்று மாலை திறப்பு

ஆரியப்பாளையம் பாலம் இன்று மாலை திறப்பு

புதுச்சேரி : ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆறு குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம் இன்று (28 ம் தேதி) திறக்க உள்ளது. புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், ஆரியப்பாளையம் சங்கராபரணி ஆற்றுப்பாலம் உள்ளது. குறுகிய பழமையான பாலத்திற்கு அருகே ரூ. 64 கோடி மதிப்பில் எம்.என்.குப்பம் முதல் இந்திரா சிக்னல் வரை சாலை மேம்பாடு மற்றும் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2022ம் ஆண்டு பிப். 11ம் தேதி துவங்கியது. எம்.என்.குப்பம் முதல் இந்திரா சிக்னல் வரையிலான சாலையில் வாய்க்கால் மற்றும் சென்டர் மீடியன் கட்டி மேம்படுத்தும் பணி முடிக்கப்பட்டது. ஆரியப்பாளையம் சங்கராபரணியின் குறுக்கே, 18 துண்களுடன் 360 மீட்டர் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாதசாரிகள் நடந்து செல்ல நடை பாதையும் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய பாலத்தில் சோதனை ஓட்டம் முடிந்து போக்குவரத்திற்கு தயாராக இருந்தது. பாலத்தை திறக்க மத்திய அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.ஆனால் சரியான தேதி கிடைக்காததால் திறப்பு விழா தள்ளி போனது. இந்நிலையில், இன்று (28ம் தேதி) மாலை 6:00 ஆரியப்பாளையம் உயர்மட்ட பாலம் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. விழாவில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை