உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாஜி அமைச்சர் மீது ராணுவ வீரர்கள் சங்கம் புகார்

மாஜி அமைச்சர் மீது ராணுவ வீரர்கள் சங்கம் புகார்

புதுச்சேரி: தமிழக மாஜி அமைச்சர் மீது, புதுச்சேரி முன்னாள் ராணுவ வீரர்கள் சங்க வீர தாய்மார்கள் நலச் சங்கத் தின் சார்பில், சீனியர் எஸ்.பி., கலைவாணனிடம் கொடுத்துள்ள புகார் மனு:சென்னையில், தமிழக முதல்வர் தலைமையில் ஆபரேஷன் சிந்துாரில், கலந்து கொண்ட ராணுவ வீரர்களை பாராட்டும் வகையில், ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, தமிழக மாஜி அமைச்சர் செல்லுார் ராஜி பதில் கூறும்போது,போர் தொடர்பாக, ராணுவ வீரர்களை பற்றி தரைக்குறைவாக பேசியுள்ளார்.இவரது பேச்சு, நாட்டிற்காக, ராணுவத்தில், பணியாற்றிவிட்டு வந்த முன்னாள் ராணுவ வீரர்களாகிய எங்களை மனதளவில் பாதித்துள்ளது. அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை