செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்
புதுச்சேரி: புதுச்சேரி குளுனி மருத்துவமனையில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. குளுனி மருத்துவமணை திட்ட இயக்குனர் ரங்கநாத், தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக ஜிப்மர் முன்னாள் டாக்டர் ஏங்சலின் கலந்துகொண்டுமருத்துவ துறையில் மருத்துவராக பரிமாணம் அடைவது, செயற்கை நுண்ணறிவு, மற்றும் மருத்துவ பராமரிப்பு குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில்டாக்டர்கள் ரமேஷ், சத்தியவாணி, இம்மானுவேல், அருட்சகோதரி மரியா, கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். கருத்தரங்கில் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனை மற்றும் கல்லுாரிகளில் இருந்து டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.