உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊதிய உயர்வு வழங்க கோரி ஆஷா பணியாளர்கள் முற்றுகை

ஊதிய உயர்வு வழங்க கோரி ஆஷா பணியாளர்கள் முற்றுகை

புதுச்சேரி : ஆஷா பணியாளர்கள், ஊதிய உயர்வு வழங்க கோரி, சுகாதாரத்துறை இயக்குனரக அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என, சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஆஷா பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்காமல் இருந்து வருகிறது. உடனடியாக, ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி, நுாற்றுக்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள், சட்டசபை அருகே உள்ள சுகாதாரத்துறை இயக்குனரகம் அலுவத்தை நேற்று மாலை 5:45 மணி முதல் 6:30 மணி வரை முற்றுகையிட்டனர். அதனையடுத்து, சுகாதாரத்துறை இயக்குனரக திட்ட அதிகாரி கோவிந்தராஜன், முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்கள் கோரிக்கையை, முதல்வரிடம் பேசி, நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, முற்றுகையிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி