உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரயில்வே கேட் சாலை சீரமைக்க அசோக்பாபு கோரிக்கை

ரயில்வே கேட் சாலை சீரமைக்க அசோக்பாபு கோரிக்கை

புதுச்சேரி: காராமணிக்குப்பம் ரயில்வே கேட் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டி ரயில்வே துறை கூடுதல் கோட்ட பொறியாளர் ஜெகதீஷிடம், அசோக் பாபு எம்.எல்.ஏ., மனு அளித்தார்.மனுவில் கூறியிருப்பதாவது:முதலியார்பேட்டை பகுதி காராமணிக்குப்பம் ரயில்வே கிராசில் கேட் எண் 44 ல் உள்ள சாலையில், ரயில்வே தண்டவாளங்கள் மாற்றி அமைக்கப்பட்டதால், அதில் ஏற்பட்ட சாலை சீர்கேடுகளை உடனடியாக சீரமைத்து பொதுமக்கள் போக்குவரத்திற்கு ஏதுவாக அமைத்து தர வேண்டும். மேலும் காராமணிக்குப்பம் சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிகம் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையாக உள்ளதால் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை