உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாராதாம்பாள் கோவிலில் அஷ்டலட்சுமி ஹோமம் 

சாராதாம்பாள் கோவிலில் அஷ்டலட்சுமி ஹோமம் 

புதுச்சேரி : சாராதாம்பாள் கோவில் நவராத்திரி சிறப்பு பூஜையில், நேற்று அஷ்டலட்சுமி ஹோமம் நடந்தது.புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி நுாறடிச்சாலை சிருங்கேரி சிவகங்கா மடம், சாராதாம்பாள் கோவிலில் பொன்விழா ஆண்டு நவராத்திரி விழா ஹோமங்கள் நேற்று முன்தினம் துவங்கியது.வரும் 11ம் தேதிவரை நடைபெறும் இந்த ஹோமத்தில், இரண்டாம் நாளான நேற்று காலை சூக்த ஹோமம், அஷ்ட லட்சுமி ஹோமம் நடந்தது. இன்று, தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஹோமம் நடக்கிறது. வரும் 11ம் தேதி மகா சண்டி ஹோமம் நடக்கிறது.விழாவையொட்டி தினசரி மாலையில் இசை, பரதம், வாய்ப்பாட்டு உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ