உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உதவியாளர் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு

உதவியாளர் தேர்வு ஆன்சர் கீ வெளியீடு

புதுச்சேரி: பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில், உதவியாளர் பணிக்கான முதல்நிலை தேர்வு ஆன்சர் கீ வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில், 256 உதவியாளர் பணிக்கு, 32 ஆயிரத்து 692 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த பணிக்கான முதல்நிலை தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி ஆகிய 84 மையங்களில் நடந்தது. அதில் ஆண், பெண், என மொத்தம் 22 ஆயிரத்து 860 பேர் எழுதினர். இந்த தேர்வுக்கான ஆன்சர் கீ நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருந்தால், https://recruitment.py.gov.in இணைதளத்தில் பார்த்து கொள்ளலாம் என நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை