உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துடன் அடல் இன்குபேஷன் சென்டர் ஒப்பந்தம்

தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துடன் அடல் இன்குபேஷன் சென்டர் ஒப்பந்தம்

புதுச்சேரி,: புதுச்சேரியில் உயர்கல்வி நிறுவன புத்தாக்கம், தொழில் முனைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் அடல் இன்குபேஷன் சென்டர் மற்றும் அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் இணைந்து ஒப்பந்தம் செய்தன.தேசியக் கல்விக்கொள்கையுடன் இணைந்த ஒத்துழைப்பு, கட்டமைக்கப்பட்ட தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல், ஆண்டுதோறும் 100 மாணவர்களுக்கு பயிற்சியை ஏதுவாக்குதல் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களுக்கு, 'பயிற்சியாளர்களுக்கு பயிற்சி' அலகுகளின் செயலாக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.நிகழ்ச்சியில், அரசு செயலர் ஜவஹர், உயர் மற்றும் தொழில் நுட்ப கல்வி இயக்கக இயக்குனர் அமன் ஷர்மா, ஏ.ஐ.சி.பி.இ.சி., அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுந்தரமூர்த்தி, உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சோழன், அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி விஷ்ணு வரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி