தடகள அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சூர் தடகள அசோசியேஷன் சார்பில் பொதுக்குழு கூட்டம், காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது.கூட்டத்திற்கு, தமிழப் பன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக முத்து வேலன், லெனின் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். செயலாளர் கோவிந்த சாமி, ரகுராமன் ஆகியோர் சங்கத்தின் ஆண்டு அறிக்கையை சமர்பித்தனர்.தலைவர் ராமலிங்கம் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை சோமசுந்தரம் கோபு, சந்திரமோகன் ஆகியோர் செய்திருந்தனர்.கூட்டத்தில், பிரேம் குமார், அரசி, அனிஷ் வெங்கடேஸ்வர ராவ், தாமஸ், ஸ்ரீஜா, முருகன், வீரப்பன், குமார் வாணிதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பிரித்ய ராயர் நன்றி கூறினார்.