உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாலிபர் மீது தாக்குதல்

 வாலிபர் மீது தாக்குதல்

புதுச்சேரி: சூப் கடையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கலிதீர்த்தால்குப்பத்தை சேர்ந்தவர்கள் கார்த்தி, 27; சந்துரு. இவர்களுக்கிடையே ஏற்கனவே பிரச்னை இருந்தது. திருபுவனை சந்திப்பு அருகில் சூப் கடையில் நேற்று முன்தினம் கார்த்தி சூப் குடித்து கொண்டிருந்தார். கடைக்கு வந்த சந்துரு மற்றும் அவரது நண்பர்கள் கார்த்தியிடம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த சந்துரு கட்டையால் கார்த்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததார். காயமடைந்து கார்த்தி, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்கு பதிந்து, சந்துரு மற்றும் அவரது நண்பர்களை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை