உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெயிண்டர் மீது தாக்குதல்

பெயிண்டர் மீது தாக்குதல்

புதுச்சேரி: ஏனாமில், பெயிண்டரை பீர் பாட்டிலால் குத்திய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.ஏனாம் கனகலாபேட்டை பகுதியை சேர்ந்த கோபி கிருஷ்ணன், 20; பெயிண்டர். இவர் நேற்று முன்தினம், ஏனாம் பைபாஸ் சாலையில் தனது பைக்கில் சென்றார். அப்போது, ஆந்திராவை சேர்ந்த மனோகர், வினோத்குமார் ஆகிய இவரும் தகராறு செய்து கொண்டிருந்தனர். அவர்களை கோபி கிருஷ்ணன் விலக்கி விட்டார்.இதில், ஆத்திரமடைந்த மனோகர், வினோத்குமார் ஆகிய இவரும் சேர்ந்த, கோபி கிருஷ்ணனை தாக்கினர். காயமடைந்த அவர், ஏனாம் மருத்துவமனையில் சேர்த்தனர்.ஏனாம் போலீசார் வழக் குப் பதிந்து, மனோகர், வினோத்குமார் இருவரையும் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி