தேர்தல் முன்விரோதம்: வாலிபர் மீது தாக்குதல்
புதுச்சேரி: குருசுக்குப்பத்தில், தேர்தல் முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டியது குறித்து முத்தியால்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமு மகன் விக்னேஷ்,25. பிளம்பர். நேற்று அதிகாலை, 1.15 மணிக்கு இவரது, அக்கா ரோஜா தொடர்பு கொண்டு, விக்னேஷின் அண்ணன், விஜயகுமார் பைக்கிலிருந்து சைக்கிளில் இருந்து விழுந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விக்னேஷ் பைக்கில் குருசுக்குப்பம் பாலம் அருகில் சென்றபோது அதேபகுதியை சேர்ந்த வினோத், ஞானவேல், ஞானசேகர், ஹரிஷ், அஜித், மணிகண்டன் ஆகியோர் விக்னேஷை ஆபாசமாக திட்டி தாக்கினர். வினோத், ஞானவேல் ஆகியார் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை வெட்டினர். தகவறிந்த விக்னேஷின் உறவினர்கள் காயமடைந்த அவரை அரசு பொது மருத்துமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில், தேர்தல் முன்விரோதம் மற்றும் பாக்ஸ் மீன் பிரச்னை காரணமாக, இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது. இதன் காரணமாக, விஜயகுமாரை வினோத் உள்ளிட்டோர் கல்லால் தாக்கி, விக்னேஷை கத்தியால் வெட்டயதும் தெரியவந்தது.