மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 7வது நாளாக ஸ்டிரைக்
18-Aug-2025
அரியாங்குப்பம்: வழக்கு தொடர்பாக அழைத்து சென்ற மீனவரை விடுவிக்க வலியுறுத்தி, போலீஸ் நிலையத்தை மீனவர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு மீனவ கிராமத்தில், தெற்கு, வடக்கு என இரு பஞ்சாயத்துகள் உள்ளது. அதில், தெற்கு பகுதி புதுச்சேரியிலும், வடக்கு தமிழக பகுதியை உள்ளடக்கியது. நல்லவாடு பகுதியில் உள்ள தில்லையம்மன் கோவிலில், பல ஆண்டுகளாக இரு பஞ்சாயத்தார்களும் சேர்ந்து ஒரே திருவிழா நடத்தி வந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், கோவில் திருவிழாவை, இரு பஞ்சாயத்தார்களும் தனித்தனியாக நடத்தினர். இந்த பிரச்னை தொடர்பாக, நல்லவாடு வடக்கு பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவரை, நேற்று முன்தினம், தவளக்குப்பம் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தகவலறிந்த, வடக்கு பகுதி மீனவர்கள், நேற்று போலீஸ் நிலையத்தில் வந்து சப் இன்ஸ்பெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிடித்து வந்த நபரை போலீசார் விடுவிக்கததால், போலீஸ் நிலையத்தை மீனவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சவார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
18-Aug-2025