கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் சார்பில், கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி மறைமலை அடிகல் சாலை, சுதேசி மில் அருகில் நேற்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார்.துணை தலைவர் புருேஷாத்தமன், கவுரவ தலைவர்கள் சுப்புராயலு, கலியமூர்த்தி, துணை தலைவர்கள் முத்தையன், நாகமுத்து, முதன்மை செயலாளர் செல்வம், செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சங்கத்தில் உள்ள வாரிசுதாரர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்னிந்தியாவில் உள்ள பழங்குடி இன மக்கள், புதுச்சேரியில் பூர்வீகமாக வாழ்வோரை, மத்திய அரசின் அட்டவணை பழங்குடி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.