| ADDED : செப் 28, 2026 10:55 PM
புதுச்சேரி: புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் முத்தியால்பேட்டையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு திட்டம் நான்கின் தலைவர் குப்புலட்சுமி தலைமை தாங்கினார் . செயலாளர் சூசை மேரி, அங்கன்வாடி சங்கத்தின் நிர்வாகிகள் சத்யா, மஞ்சுளா, நிர்மலா முன்னிலை வகித்தனர் . அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தமிழரசி , செயல் தலைவர் ராஜலட்சுமி, செயலாளர் லலிதா , அரசு ஊழியர் சம்மேளனத்தின் செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் முனுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்பாட்டத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும், காலியாக உள்ள நிரந்தர பணியிடங்களில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 176 அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துவிட்டு, மீதமுள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பட்டது.