உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டி: புதுச்சேரி வீரர்கள் தெலுங்கானா பயணம்

 அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டி: புதுச்சேரி வீரர்கள் தெலுங்கானா பயணம்

புதுச்சேரி: தேசிய அளவிலான அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க புதுச்சேரியை சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணியினர் ரயில் மூலம் தெலுங்கானா புறப்பட்டு சென்றனர். தெலுங்கான மாநிலம், நாகர்குர்னுல் இடத்தில் 9வது தேசிய ஆடவர் மற்றும் மகளிர்களுக்கான அட்டிய பட்டியா சாம்பியன்ஷிப் போட்டி வரும் 14, 15ம் தேதி நடக்கிறது. இப்போட்டியில் புதுச்சேரி அட்டிய பட்டியா அசோசியேஷன் சார்பில், ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் கலந்து கொள்கின்றன. அதன்படி, சஞ்சய் தலைமையில் ஹேமச்சந்திரன், சந்தோஷ், வெங்கட்ராமன், அர்ஜூன், பாரதிதாசன், மவுளிராஜ், சதீஷ்குமார், பிரசன்னா, தமிழ்செல்வன், சரண்மிதேஷ், வசந்த், ரதிஷ், மோதிஷ், கவின்ராஜ் ஆகியோர் அடங்கிய ஆடவர் அணியும். அபிநயா தலைமையில் கிறிஸ்டினா, காவேரி, பூரணி, தமிழ்செல்வி, சுவாதி, ஜெயந்தி, மதுமிதா, கோமளா, சந்தியா, ஜெயதர்ஷினி, ஷன்மதி, தர்ஷினி, ஆதிஷா, மோனிஷா ஆகியோர் அடங்கிய மகளிர் அணியும் கலந்து கொள்கின்றன. இந்த இரு அணிகளும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க நேற்று (12ம் தேதி) புதுச்சேரியில் இருந்து ரயில் மூலம் பொது மேலாளர் சிவக்குமார், இனியன், அசிஸ், மனிஷா ஆகியோருடன் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி